கொட்டகலை புதியநகர் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தின் விநாயகர் சதுர்த்தி தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

0
161

விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு மலையக ஆலங்களில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிலையில் கொட்டகலை புதிய நகர் நேத்ரா ப்ளேஸ் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்தின் தேர் பவனி நேற்று (18) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இத்தேர் பவனி ஆலயத்தில் புறப்பட்டு விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து மேளதாள வாத்தியங்கள் இசை முழங்க தேர் பவனி நேற்று மாலை ஆரம்பமானது. இந்த தேர் பவனி ஹட்டன் நுவரலியா பிரதான வீதியூடாக குடாகம வரை சென்று மீண்டும் திரும்பி நேத்ரா ப்ளேஸ் ஊடாக கேம்பிரிஜ் பாடசாலை சந்தி வரை சென்று மீண்டும் ஆலயத்தினை வந்தடைந்தது.
குறித்த தேர் பவனியினை முன்னிட்டு பால்குட பவனி கொட்டகலை நேத்ரா ப்ளேஸ் அம்மன் ஆலயத்தில் ஆரம்பித்து மேளதாள இசை முழங்க ஆலயத்தை வந்தடைந்து விநாயக பெருமானுக்கு பாலபிசேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கலந்து கொண்ட பக்த அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு விபூதி பிரசாதமும் வழங்கப்பட்டதனை தொடர்ந்தே குறித்த தேர் பவனி ஆரம்பமானது. இதில் பிரதேசத்தைச் சேர்ந்து ஏராளமான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here