கொட்டகலை – வூட்டன் ஹில்ஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த வைகாசிப் பௌர்ணமி தேர் திருவிழாவை முன்னிட்டு 28.05.2018 அன்று பால்குட பவனி வெகுசிறப்பாக இடம்பெற்றன.கொட்டகலை ரொசிட்டா பாம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து விசேட வழிபாடுகள் 28.05.2018 அன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்று, பின்னர் இந்துக்களின் கலாச்சார மேளதாளம் முழங்க பெருந்திரளான அடியார்கள் பால்குடங்களை ஏந்தியவாரு பால்குட பவனி இடம்பெற்றதோடு, விசேட பூஜைகளும் இடம்பெற்றது.
இந்த விசேட பூஜை வழிபாடுகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர். மேலும், பறவைக்காவடியுடன், யானை பவனியும் இடம்பெற்றன.
(க.கிஷாந்தன்)