கொட்டக்கலையில் கூப்பன் முறையில் கேஸ் விநியோக திட்டம் அறிமுகம்.

0
112

கொட்டக்கலையில் எரிவாயு சிலிண்டர்களை கூப்பன் முறை மூலம் தடையின்றி வழங்குவதற்கு கொட்டகலை வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.அந்தவகையில் கொட்டகலை வர்த்தக சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தலைமையில் விசேட கூட்டம் இடம்பெற்றது இதன்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டதிற்கிணங்க கொட்டக்கலையில் ஐந்து கிராமசேவகர் பிரிவிலும் வருகின்ற ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் கூப்பன் ஒன்று ஒவ்வொறு குடும்பத்திற்கும் கிராமசேவகர் உறுதிபடுத்தப்பட்ட முத்திரையோடு கூப்பனொன்று வழங்கப்படும்.

இக்கூப்பனினை எரிவாயு விற்பனை முகவரிடம் கொடுக்கும் பட்சத்தில் அவருக்கான அம்மாதத்திற்கான எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் கையளிக்கப்படும்.இம்முறை மூலம் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க தேவையில்லை அனைத்து குடும்பத்திற்கும் மாதம் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள கூடிய்தாகவும் இருக்குமென கொட்டகலை வர்த்தக சங்க தலைவர் புஸ்பா விஸ்வநாதன் குறிப்பிட்டிருந்தார்.

இக்கலந்துரையாடலில் திம்புளை பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த ஸ்ரீ உட்பட கொட்டகலை வர்த்தக சங்க உறுப்பினர்களும் கலந்துக்கொண்டிருந்தனர்.மேலும் கொட்டகலைக்கு அப்பால் மற்றும் வெளியிடங்களை சார்ந்தவர்கள் கொட்டகலையில் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள முடியாது என இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here