ஏனைய வர்த்தக நிலையங்களுடன் ஒப்பிடுகையில் பொருட்களின் விலைகள் குறைவாகவும் தரமாகவும் இருக்கும் என்று எண்ணி பொது மக்கள் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு செல்கின்றனர்.
கூட்டுறவு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இவ் வணிக நிறுவனம் பொதுவாக மக்களுக்கு சேவையையே வழங்கி வருகின்றன.
இருப்பினும் கடந்த சில தினங்களாக கொட்டக்கலை நகரிலுள்ள ச.தொ.ச வணிக அமைப்பானது வாடிக்கையாளர்களுக்கு சில நிபந்தனைகளை விதித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ரூபா 500 இற்கு மேல் பொருட்களை வாங்கினால் மாத்திரமே சீனி வாங்க முடியும் என்பதோடு, ஒருவருக்கு 1 kg இனி மாத்திரமே வாங்க முடியும் என்றும் நிபந்தனைகளை விதித்து வருகின்றது.
இதனால் சதொச விற்கு செல்லும் மக்கள் பல சிரமங்களுக்கு முகங் கொடுத்து வருவதாக கூறுகின்றார்கள்
S. சுஜீவன் – தலவாக்கலை