கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் புலமைபரிசீல் பரீட்சை மாதிரி வினாத்தாள்களை கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் செல்லமுத்து செல்வமதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் கொத்மலை பகுதியில் 40 தமிழ் பாடசாலைகள் உள்ள அதே சந்தர்ப்பத்தில் 1026 புலமை பரிசீல் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்கள் காணப்படுகின்றார்கள்.எனவே அனைத்து மாணவர்களுக்கும் மாதிரி வினாத்தாள்களை கொத்மலை பிரதேச சபையூடாக முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் ர
மருதபாண்டி ராரேஸ்வரன் ஆலோசனையில் ‘கல்விக்கு கரம் கொடுப்போம்’ என்ற அடிப்படையில் இத்திட்டம் ஆரம்பிக்கவுள்ள இருப்பதாகவும் இதற்கான அனுமதியை கொத்மலை பிரதேச சபை தலைவர் சுசந்த ஜயசுந்தர பிரதீப்குமார ஆமோதித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
என இன்னும் ஒருசில தினங்களில் கொத்மலையில் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இலவச புலமைபரிசீல் மாதிரி வினாத்தாள்களை அச்சிட்டு வழங்கப்படும் எனவும் செல்லமுத்து செல்வமதன் குறிப்பிட்டார்.
நீலமேகம் பிரசாந்த்