மலையக பெண்கள் ஒன்று கூடல் நிகழ்வு ஒன்று கொத்மலை கட்டுகித்துல ஹெல்பொட தோட்டம் விக்ணேஸ்வரா தழிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இந்திய பாண்டிசேரியை சேர்ந்த வைத்தியர் பேச்சாளர் திருமதி பிரமிளா தமிழ்வாணன் சிறப்பு அதிதியாக கண்டி மனிதவள அபிவிருத்தி தாபனத்தின் பனிப்பாளர் திருமதி எஸ். யோகேஸ்வரி அவர்களுடன் இம்முறை கொத்மலை மற்றும் உடபளாத்த பிரதேச சபைக்கு தெரிவான பெண் பிரதேச சபை உறுப்பினர்கள். தோட்ட தொழிளால பெண்கள் ஆசிரியைகள் பாடசாலை மாணவிகள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
தொடந்து இவர்களுடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி. விக்ணேஸ்வரா தழிழ் வித்தியாலயத்தின் அதிபர் கே.மகேந்திரன். பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்தக் கொண்டனர்.
நிகழ்வில் பெண்கள் உரிமை தொடர்பான உரைகளும். சாதித்த பெண்கள் கௌரவிப்பும் கலை நிகழ்ச்சிகளும் அதிதிகளுக்கான நினைவு சின்னம் வழங்களும் நடைபெற்றது. நடந்து முடிந்த மகளீர் தினத்தை முன்னிட்டு இந் நிகழ்வு ஏற்பாடு செய்யபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
பா.திருஞானம் .