கொத்மலை ஓயாவில் குடைசாய்ந்த கார்!

0
108

கொழும்பில் இருந்து லிந்துளை நோக்கி பயணித்த கார்வண்டி கொத்மலை ஒயாவில் குடைசாய்ந்தது.லிந்துளை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தலவாகலை கொத்மலையில் காரவண்டி ஒன்று குடைசாய்ந்ததில் கார்வண்டியில் சென்றவர்கள் மயில் கல்லில் உயிர் தப்பியதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்தனர்

இந்த சம்பவம் 26.05.2018.சனிகிழமை மாலை 04மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது .

கொழும்பில் இருந்து லிந்துளை அகரகந்தை பகுதிக்கு உறவினர்கள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தவர்களின் கார் வண்டியே இவ்வாறு கொத்மலை  ஓயாவில் குடைசாய்ந்துள்ளதாகவும் கார்வண்டியில் பயணித்தவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்பட் வில்லையென லிந்துளை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

IMG-429375ab62477dfeb8194b055170a3f9-V

கொத்மலை ஓயாவில் குடைசாய்ந்த கார்வண்டியினை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து மீட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் தொடரும் சீரற்றகாலநிலை காரணமாகவே வீதியின் வலுக்கல் தன்மை ஏற்பட்டமைக்கான காரணமென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை லிந்துளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here