இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களால் கொத்மலை பிரதேச அரசியல் அமைப்பாளராக தவலந்தன்னை வெவன்டன் தோட்டத்தை சேர்ந்த தங்கராஜ் புன்னியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.இனிவரும் காலங்களில் கொத்மலை பிரதேசத்தின் உள் அரசியல் தொடர்பான விடையங்களில் செயற்படவும் பதவி உயர்வு வழங்கும் நோக்கிலும் ஆறுமுகன் தொண்டமான் அவர்களால் நியமனக் கடிதமும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.