இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் கொத்மலை பிரதேசபை
உறுப்பினர் ஆர்.நகுலேஷ்வரன் தொழிலாளர் தேசிய சங்கத்தோடு இணைந்துள்ளார்.
சுப்பையா சதாசிவத்தின் கட்சியான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆர்.நகுலேஸ்வரன்(20/02/2022) ஞாயிற்றுக்கிழமை உத்தியோகப்பூர்வமாக தொழிலாளர் தேசிய சங்கத்தோடு இணைந்து கொண்டார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராமான எம். உதயகுமாரை சந்தித்து தன் உத்தியோகபூர்வ இணைவை அறிவித்தார்.இது தொடர்பில் அவர் குறிப்பிடுகின்ற போது அண்மைகாலமாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் மந்தகதியான போக்கே தான் மாற்றுக்கட்சிக்கு செல்வதற்கான காரணமெனவும் குறிப்பிட்டார்.
நீலமேகம் பிரசாந்த்