கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட வேவண்டன் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இழக்காகி தோட்டத்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.55 வயதான மாரிமுத்து என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த தோட்டத்தில் 22/09/2022 வியாழக்கிழமை காலை தேயிலை தொழிலுக்கு சென்ற வேளையில் மரத்திலிருந்த குளவி கூடு கலைந்து குறித்த தோட்ட தொழிலாளர்களை தாக்கியுள்ளது.குளவி கொட்டுக்கு இழக்காகி இருவர் கொத்மலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த தொழிலாளி உயிரிழந்துள்ளார்.மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்