கொரோனா தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்!

0
91

சர்வதேச நாடுகளில் கொரோனா தொற்று அதிகரிக்கின்றமை குறித்து தொடர்ச்சியாக அவதானித்து வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர்களுடன் இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைய, மேலதிக அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இச் சூழ்நிலைகளை ஆராய்ந்து விசேட நிபுணர்கள் பரிந்துரைகளை முன்வைக்கும் பட்சத்தில், மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் மக்கள் தமது வழமையான சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் விமான நிலையங்களில் தற்போது எந்தவொரு கொரோனா பரிசோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவித்த அவர், வௌிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தருவோர் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அவதானமாக செயற்படுவது போதுமானது என்றார்.

விசேடமாக பண்டிகைக் காலத்தில் கொண்டாட்டங்களில் கலந்துகொள்தல், களியாட்டங்களில் ஈடுபடுதல், ஒன்று கூடுதல், சுற்றுலா செல்தல் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான பயணங்களில் ஈடுபடல் உள்ளிட்ட செயற்பாடுகளின் போது மக்கள் தமது சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here