கொரோனா தொற்று பரவல் காரணமாக பல முறை பிற்போடப்ட்ட உயர்தர பரீட்சை 2, 437 நிலையங்களில் இன்று (07) ஆரம்பமாகின. மலையகப்பகுதிகளில் குறித்த பரீட்சைக்கு மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தோற்றினர்.
அனைத்து பரீட்சை நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தன.
க.பொ.த உயர்தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இதனைத் தெரிவித்தார்.
குறித்த பரீட்சை பெப்ரவரி 07ஆம் திகதி முதல், மார்ச் 05ஆம் திகதி இப்பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. இப்பரீட்சைகள் 2, 437 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளன. பரீட்சைகளில், 345,242 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதோடு, அவர்களில், 279,141 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளும், 66,101 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பரீட்சைக்கு விண்ணப்பித்து, கொவிட் தொற்றுக்குள்ளான மற்றும் தனிமைப்படுத்தலில் உள்ள பரீட்சார்த்திகளுக்காக, விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மலைவாஞ்ஞன்