கொலன்னாவை மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து குடியிருப்பின் மீது வீழ்ந்ததில் 6 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முப்படையினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கும் அறிவுறுத்தியுள்ளார்.