நாட்டில் இன்று மக்கள் பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.பொருளாதார நெருக்கடி காரணமாக நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் உயர்ந்து வரும் நிலையில் மூன்று வேளை உணவினை கூட உண்ண முடியாது மக்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் இந் நிலையில் கடந்த காலங்களில் நாட்டை சூறையாடிய மத்திய வங்கியை கொள்ளையிட்ட சீனி வெள்ளைப்பூடு உளிட்ட கொள்ளையில் ஈடுபட்டவர்களின் பணத்தினை பறிமுதல் செய்யாது பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்கள் மீது மேலும் மேலும் வெட்வரியினை சுமத்துவது மிகவும் பொருத்தமற்றது என கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவரும் மலையக தொழிலாளர் முன்னணியின் பதில் பொதுச் செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்தார்.
இன்று 27 ம் திகதி ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அரசாங்கம் ஜனவரி முதல் வெட் வரியினை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது இதனால் பெற்றோல் டீசல்,பால் மருந்து பொருட்கள் உள்ளிட்ட சுமார் 900 பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன இன்று இரண்டு நேர உணவினை கூட உண்ண முடியாது வாழும் தோட்டத்தொழிலாளர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள் அதே நேரம் விவசாய பொருட்களுக்கு வெட்வரி அதிகரிக்கப்படுவதனால் மேலதிக வருமானத்திற்காக விவசாயத்தில் ஈடுபட்டவர்களுக்கு அதனை செய்ய முடியாத நிலை ஏற்படும் இன்று அறவிடப்படவுள்ள வெட்வரியானது சாதாரண மக்கள் சுமார் மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என பேராதனை பொறியியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்கள் மீது மேலும் வரி சுமையினை சுமத்தி பாதிக்கப்பட செய்யாது வரியினை குறைத்து மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது மக்கள் நியமான முறையில் வரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் கடந்த காலத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட ஆயிரம் ரூபா சம்பளம் கூட முறையாக இது வரை பெற்றுக்கொடுப்பதில்லை இந்நிலையில் அத்தியவசிய பொருட்களுக்கு வரி செலுத்த வேண்டி வந்தால் மேலும் மேலும் பெருந்தோட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே ஜனாதிபதி தோட்டத்தொழிலாளர்களுக்கு அதிகரிக்க நினைத்த 1700 ரூபா சம்பளத்தினை பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அல்லது வெட்வரியினை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் மக்கள் வாழ வழியின்றி பெருந் துன்பங்களுக்கு ஆளாகுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
மலைவாஞ்ஞன்