பாடசாலை மாணவர்களிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய 15 மாணவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த மோதலில் இரண்டு பஸ்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்களிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஆறு மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள மூன்று பிரதான பாடசாலை மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாகவே குறித்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 03 டி.எஸ். சேனாநாயக்க பாடசாலை மாணவர்களும், இரண்டு ஆனந்தா கல்லூரி மாணவர்களும், ஒரு நாளந்தா கல்லூரி மாணவனும் அடங்குவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் 15 மாணவர்கள் மருதானை மற்றும் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.