கொழும்பு – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து மட்டு

0
97

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து இன்று (27) இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நிட்டம்புவை ஸ்ரீ விஜயராம விகாரையில் இன்று (27) இடம்பெறவுள்ள துருத்து மகா பெரஹெரவை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கண்டி பிரதான வீதி மல்வத்தை சந்தியில் இருந்து நிட்டம்புவை சந்தி வரையிலான ஊர்வலத்தின் போது கண்டி செல்லும் பாதையில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதுடன் கண்டியிலிருந்து கொழும்பு செல்லும் வழிப்பாதையில் வழமை போன்று போக்குவரத்து இடம்பெறும் என கூறப்படுகின்றது.

இவ்வாறு, போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் கொழும்பில் இருந்து நிட்டம்புவை நகர் ஊடாக கண்டி நோக்கி பயணிக்க உத்தேசித்துள்ள சாரதிகள் மற்றும் பொதுமக்கள் பின்வரும் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும் வாகனங்கள் கல்கெடிஹேன சந்தியில் இடதுபுறம் திரும்பி வெயாங்கொடை நகருக்கு சென்று, வலதுபுறம் திரும்பி வெயாங்கொடை நிட்டம்புவ வீதியில் நிட்டம்புவ சந்தியை அடைந்து, இடதுபுறம் திரும்பி கண்டி நோக்கி செல்லலாம்.

மீரிகம-குருணாகல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் கலகெடிஹேன சந்தியிலிருந்து இடதுபுறம் திரும்பி வெயாங்கொடை நகரத்திற்குச் சென்று வலப்புறம் திரும்பி வெயாங்கொடை நிட்டம்புவ வீதியில் 100 மீற்றர் சென்று இடதுபுறம் கொத்தலா வீதியில் மல்லஹாவ சந்தி வரை சென்று பஸ்யால மீரிகம வீதியில் இடதுபுறம் திரும்பி மீரிகம திசை நோக்கி செல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here