கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் (பிரைவேட்) லிமிடெட், தாமரை கோபுரம் பொதுமக்களின் பார்வைக்காக செப்டம்பர் 15, 2022 அன்று திறக்கப்பட்ட நாளிலிருந்து 50,000 வது வெளிநாட்டு பார்வையாளர்களின் வருகையை பதிவு செய்ததாக இன்று(31) தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை வகிக்கும் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, கொழும்பு தாமரை கோபுரம் சுற்றுலாத்துறையின் விரிவாக்கத்தை வளர்ப்பதில் ஒரு முக்கிய சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அர்ப்பணிப்புடன் உள்ளது.
இந்த முக்கியமான நிகழ்வைக் கொண்டாடும் வகையில், 50,000 வது பார்வையாளருக்கு பரிசுத் தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.