கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள கப்பலில் இருந்து 3,500 மெற்றிக்டன் எரிவாயுவை தரையிறக்கும் நடவடிக்கையை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கான திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் சில நாட்களுக்குள் நாட்டில் நிலவும் எரிவாயு பற்றாக்குறை கிரமமாக நீங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.