கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ள பெரும் பிரச்சினை! பிரேத அறையில் குவியும் சடலங்கள்

0
82

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் (Colombo National Hospital) பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், குளிரூட்டியில் வைக்கப்பட்டுள்ள சில சடலங்கள் ஒரு வருடத்திற்கும் மேலானவை எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் சுமார் 66 சடலங்களை வைப்பதற்கான வசதிகள் உள்ளன.

ஆனால் அவற்றில் இதுவரையில் 40 சடலங்கள் அடையாளம் காணப்படாதவை என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனைகளில் வைப்பதிலும், பிரேத பரிசோதனைக்காக கொண்டு வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சில உடல்கள் எந்த வகையிலும் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைவடைந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறித்த சடலங்களை அகற்றும் முறையிலுள்ள குறைபாடுகள் காரணமாக, சிதைவடைந்த சடலங்கள் வைத்தியசாலையின் பிரேத அறையில் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here