கொழும்பு – பதுளை வீதியில் பாறைகள் விழும் அபாயம்

0
49

இந்த நாட்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஹப்புத்தளை பெரகல மற்றும் கொழும்பு பதுளை பிரதான வீதிக்கு இடைப்பட்ட பகுதியில் பாறைகள் விழும் அபாயம் உள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மரங்கஹவெல முதல் ஹப்புத்தளை வரையிலான கொழும்பு பதுளை வீதிப் பகுதியின் உயரமான மலைச் சரிவில் இருந்து பாறைகள் விழும் அபாயம் உள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அவ்வப்போது கடும் பனிமூட்டம் காணப்படுவதால் இந்த வீதியை பயன்படுத்தும் போது அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பொலிஸார் சாரதிகளை கேட்டுக்கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here