கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதியில் வாழும் மக்களுக்கான செய்தி!

0
91

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதியில் தடைப்பட்டுள்ள நீர்விநியோகம் விரைவில் வழமைக்கு திரும்பும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இரவு பத்து மணிக்கு முன்னர் தடைப்பட்ட நீர்விநியோகம் வழமைக்கு திரும்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தலேயில் இருந்து நீர் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் நேற்றிரவு 07 மணியளவில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. நீர்குழாயை திருத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் அஜித் பெரேரா குறிப்பிட்டார்.

நீர் விநியோகிக்கும் குறித்த பிரதான குழாயில், பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.

குழாய் திருத்தப்பட்டு மீண்டும் நீர் விநியோகிப்பதற்கு இரவு 10 மணியாகலாம் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் அஜித் பெரேரா குறிப்பிட்டார்.

நீர் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, கொழும்பு – 05 மற்றும் 06, பத்தரமுல்லை, பெலவத்தை, உடுமுல்ல மற்றும் ஹிம்புட்டான பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ள நிலையில், நீர் விநியோகமும் இன்றி மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here