கொஸ்கம வெடிப்பு சம்பவத்தினால் பாதிப்புக்குள்ளானவர்கள் முறைப்பாடு செய்ய ஐந்து மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெடிப்பு சம்பவத்தினால் வீடுகள், சொத்துக்களை இழந்தவர்களின் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக இந்த மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவிஸ்ஸாவெல, பூகொட, தொம்பே, ஹங்வெல, கொஸ்கம ஆகிய இடங்களிலேயே குறித்த மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிப்புக்ககுள்ளான பொதுமக்களை உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.