வெடிப்புக்கு உள்ளான கொஸ்கம – சாலாவ இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள ஹைலெவல் வீதி போக்குவரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பேரூந்து, நோயாளர் காவு வண்டிகள், பிரதேசத்தில் உள்ளவர்களின் வாகனங்கள் மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடும் வாகனங்களைத் தவிர ஏனைய வாகனங்களின் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெடி விபத்தினால் சேதமடைந்த பகுதிகளில் உள்ள வெடிப் பொருள் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படாமல் வீதி திறக்கப்பட்டமைக்கு எதிராகப் பிரதேச மக்கள் நேற்றைய தினம் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த வீதியில் போக்குவரத்து நேற்றிலிருந்து மட்டுப்படுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.