கொஸ்கம – சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரிக்க, அடிப்படை விசாரணை இராணுவ நீதிமன்றத்தை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துக்கு காரணமான விடயங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கையிட தேசிய பாதுகாப்புச் சபையின் பணிப்புரைக்கு அமைய இராணுவத் தளபதியினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என, பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினராலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.