கோட்டா கோ கம தாக்குதல் – மகிந்த ,நாமல் தொடர்பில் உச்சநீதிமன்றின் உத்தரவு

0
69

2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான உண்மைகளை முன்வைக்க, எதிர்வரும் டிசம்பர் 22ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, அமைச்சர்களான சனத் நிஷாந்த, பிரசன்ன ரணதுங்க, சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோருக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

“கோட்டாகோகம” பிரசாரத்தில் ஈடுபட்ட ஐவரினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான விஜித் மலல்கொட மற்றும் ஜனாத் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here