விஜய் தன்னுடைய அரசியல் வருகையை அறிவித்து விட்ட நிலையில் அவர் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக கேரளா மற்றும் ரஷ்யாவுக்கு படக்குழு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏப்ரல் மாத இறுதிக்குள் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை தான் நிராகரித்ததாக மலையாள நடிகர் வினித் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அதில் “நான் வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது எனக்கு கோட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நானே படத்தின் இயக்குனராக இருப்பதால் என்னால் தேதிகளை ஒதுக்க முடியவில்லை’ எனக் கூறியுள்ளார்.