முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பில் ஒரு பகுதியினர் இன்று (12) நீக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு மாற்றீடாக பொலிஸ் அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தனக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவப் பாதுகாப்பை நீக்கவேண்டாம் என கோத்தபாய ராஜபக்ஷ முன்னர் வேண்டுகோள் விடுத்திருந்த்தார்.
என்றாலும் யாருடைய பாதுகாப்புக்காகவும் இராணுவத்தினர் பயன்படுத்தப்படமாட்டார்கள் என பாதுகாப்புச் சபை தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.