கோயிலில் கிரிக்கெட் விளையாடிய தமிழக வீரர்.. பக்தர்கள் கடும் எதிர்ப்பு!

0
84

மும்பை : தமிழக கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் காஞ்சிபுரத்தில் கோயில் ஒன்றில் கிரிக்கெட் விளையாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி பிறகு இந்திய அணியில் இடம் பிடித்தவர் வெங்கடேஷ் ஐயர்.

முதல் ஆண்டு சிறப்பாக விளையாடி ரசிகர்களை கவர்ந்த நிலையில் பிறகு காயம் காரணமாக தனது இடத்தை இழந்தார். இந்த நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் 14 ஆட்டங்களில் விளையாடிய வெங்கடேஷ் ஐயர், 404 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒரு சதமும், இரண்டு அரை சதமும் அடங்கும். 21 சிக்ஸர்களை இந்த தொடரில் விளாசிய வெங்கடேஷ் ஐயர். ஸ்டிரைக் ரைட்டை 145 என்று அளவில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் வெங்கடேஷ் ஐயர் காஞ்சிபுரத்தில் உள்ள சங்கராச்சாரியார் மடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பயின்று வரும் குருகுல மாணவர்களுடன் வெங்கடேஷ் ஐயர் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். குருகுல மாணவர்கள் பந்து வீச அதனை சிக்ஸர்களுக்கு வெங்கடேஷ் ஐயர் விளாசினார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.

இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கடவுளை வணங்கும் இடமான கோயிலில் வெங்கடேஷ் ஐயர் எப்படி கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்பட்டது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனினும் வெங்கடேஷ் ஐயர் மீது தவறு இல்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதலில் அது அரசு நிர்வகிக்கும் கோயில் கிடையாது என்றும், காஞ்சி மடத்தினுடைய தனிப்பட்ட சொத்து என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

சங்கராச்சாரியார் சந்திர சேகந்திர சரஸ்வதி முக்தி அடைந்த இடம் என்றும் அங்கு பாடசாலை அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு வேதம் கற்பிக்கப்பட்டு வருவதாகவும் சிலர் கூறியுள்ளனர். மேலும் கோயிலுக்குள் பட்டிமன்றம் நடன நிகழ்ச்சிகள் அனைத்தும் காலம் தொற்று நடைபெற்று வருவதால் இதில் தவறு இல்லை என்றும் சிலர் சுட்டிக்காட்டி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here