கோழி, முட்டை விலைகளை குறைக்க திட்டம்

0
86

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தவும், முட்டை தட்டுப்பாட்டைக் குறைக்கவும் உள்ளூர் கோழிப்பண்ணை தொழில்துறையின் உடன்படிக்கையுடன் கூடிய யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் அதிகபட்ச சில்லறை விலையை விதிப்பது குறித்தும், தேவைப்பட்டால் வெளிநாடுகளில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது குறித்தும் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தேவைப்பட்டால் கடுமையான விதிகளின் அடிப்படையில் கோழி இறைச்சி விலை உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காலநிலை காரணமாக தொழில் தடைபட்டுள்ளதால் கோழி இறைச்சிக்கான தேவை அதிகரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here