கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு

0
213

பண்டாரவளை கிரேக் தோட்ட கீழ் பிரிவு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது.

குறித்த கோயிலிலுள்ள உதவி பூஜகர் இன்று காலை பூஜைகளை ஆரம்பிப்பதற்கு ஆலயத்துக்கு வருகை தந்தபோது கோயில் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை அவதானித்தார்.

அதன் பின்னர் பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

பண்டாரவளை பொலிஸார் சிசிடிவி காட்சிகளுடன், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு குற்றவாளியை பிடிப்பதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here