க்ளப் வசந்தவின் இறுதி சடங்கு – மலர்ச்சாலைக்கு தொலைபேசியில் மிரட்டல்

0
77

அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களால் கொல்லப்பட்ட வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேராவின் சடலத்தை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டாமென பொரளையில் உள்ள பிரபல மலர்சாலைக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பொரளை பொலிஸாரிடம் ஊழியர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

மலர்சாலையில் பொருத்தப்பட்ட தொலைபேசியில் வெளியிலிருந்து வந்த தொலைபேசி எண் பதிவாகவில்லை என்றும், அதுகுறித்து உண்மைகளை ஆராய நீதிமன்றத்தில் தெரிவித்து, நீதிமன்ற உத்தரவுப்படி தொலைபேசி ஆய்வு அறிக்கையை பெறவும், அதன் மூலம் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து எந்த முகவரியில் இருந்து அந்த அழைப்பு எடுக்கப்பட்டதாக அறிந்து அந்த நபரை அடையாளம் காணவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here