சச்சினின் சாதனையை சமன் செய்த கோலி – இலங்கைக்கு இலக்காக 373 ஓட்டங்கள்

0
33

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.

இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் துடுப்பாட்ட போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக இன்று நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 ஆட்டமிழப்புக்கு 373 ஓட்டங்களை குவித்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச துடுப்பாட்டத்தில் தனது 73வது சதத்தை பதிவு செய்தார்.

ஒருநாள் போட்டியில் விராட் கோலி 45வது ஒருநாள் சதத்தை பதிவு செய்ததோடு சச்சின் தெண்டுல்கரின் மகத்தான சாதனையை சமன் செய்தார்.

சச்சினின் 49 ஒருநாள் சதங்களை விட கோலி இப்போது நான்கு சதங்கள் குறைவாக உள்ளார்.குறித்த சாதத்தின் மூலம் உள்நாட்டில் 20 சதங்கள் அடித்த சச்சின் தெண்டுல்கர் சாதனையை கோலி சமன் செய்துள்ளார்.

ஒன்பது சதங்கள்

கோலி ஒருநாள் போட்டி விவரம்
•போட்டிகள் – 266

•இன்னிங்ஸ் – 257

•ஓட்டங்கள் – 12584

•சராசரி – 57.72

•சதம் – 45

•அரை சதம்- 64

•ஓட்ட சராசரி – 93.25

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here