ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, அந்த சக்தியின் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு ஏற்பாட்டாளர் முஜிபுர் ரஹ்மான், ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் அப்சரா அமரசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மற்றும் பெண் செயற்பாட்டாளர்களுக்கே இவ்வாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் முஸ்லிம் மையவாடிக்கு அருகில் இருந்து எதிர்ப்பு பேரணி நடத்தப்படவிருப்பதாக மாளிகாவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதுதொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்தே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலே குறிப்பிடப்பட்டவர்கள் வீதிகளை பாவிப்போருக்கு இடையூறுகளை ஏற்படுத்தல், பாதசாரிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தல், இடைஞ்சல்களை ஏற்படுத்தல், மற்றும் பிரதான வீதிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பயணிப்பதற்கு தடைவிதித்தே நீதிமன்றத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.