சட்டமா அதிபருடன் ஜனாதிபதி விஷேட கலந்துரையாடல்…….

0
124

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவுக்கும் இடையில் தற்போது விசேட கலந்துரையாடல் ஒன்று நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமையில், அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் ஏற்பாடுகள் குறித்து இவரும் கலந்துரையாடி வருவதாக பேசப்படுகிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பதிலாக வேறு ஒருவரை பிரதமராக நியமிக்க சட்டத்தில் இடமுள்ளதா என்பது தொடர்பாக இந்த கலந்துரையாடல் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது திருத்தச்சட்டத்திற்கு அமைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தால், மாத்திரமே அந்த பதவிக்கு புதியவர் ஒருவரை நியமிக்க முடியும் என அரசியலமைப்புச் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் பதவி விலகாத நிலையில், வேறு ஒருவரை அந்த பதவிக்கு நியமித்தால், அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here