அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக மதுபாணம் விற்றவா் கைது .ஒரு தொகை மதுபான போத்தல்கள் மீட்பு.
ஹட்டன் வெளிஒயா பகுதியில் சட்டவிரோதமாக அனுமதி பத்திரமின்றி மதுபானம் விற்பனை செய்து வந்த ஒருவா் 01.01.2018.திங்கள் கிழமை காலை கைது செய்யபட்டுள்ளதுடன் ஒரு தொகை மதுபான போத்தல்களையும் ஹட்டன் பொலிஸாா் மீட்டுள்ளனா்.
இதில் 24மதுபான போத்தல்களும் பியா்போத்தல் 24கும் மீட்கபட்டதாக ஹட்டன் பொலிஸாாின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யபட்ட சந்தேக நபா் 02.01.2018.செவ்வாய் கிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜா்படுத்தபட உள்ளதாக பொலிஸாா் மேலும் தெரிவித்தனா்.
சம்பவம் தொடா்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.
பொகவந்தலாவ நிருபா்.எஸ்.சதீஸ்