சத்துணவு திட்டம் வரவேற்கதக்கது ஆனால் சிறுவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்.

0
98
உலக வங்கியின் ஊடாக மலையக பெருந்தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் காணப்படும் சிறார்களுக்கு போஷாக்கான சத்துணவு வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது.ஆனால் அதை படம் பிடித்து விளம்பரம் தேடிக்கொள்வதும் மலையக சிறார்களை போஷாக்கற்றவர்கள் போல சித்தரிப்பது எம் சமூகத்தை நாமே இழிவுபடுத்துவது போல காணப்படுவதாக மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விளக்கமளிக்கையில் உலக வங்கியின் நிதியொதுக்கிட்டின் கீழ் மலையகத்தில் காணப்படும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் காணப்படும் 23000 சிறார்களை இழக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் இத்திட்டம் வெறுமனே ஆறுமாதத்துக்கு மாத்திரமே வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இத்திட்டம் வரவேற்க தக்க விடயமாக காணப்பட்டாலும் எம் மலையக சிறார்கள் இத்தனை காலமும் போஷாக்கற்றவர்கள் போல சித்தரிப்பதும் உணவுகளை வழங்கும் போது அவர்களின் புகைப்படங்களை ஊடகங்களை பதிவேற்றுவதும் சற்று நம் சமூகத்தை இழிவுபடுத்துவது போல அமைகின்றது.எனவே இதை அமைச்சர் ஜீவன் தொண்டமான் மாற்றி கொள்ள வேண்டும் அதேபோல தன் ஆதரவாளர்களுக்கும் தன் கட்சி சார்ந்தவர்களுக்கும்  கூற வேண்டும் என மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here