சப்ரகமுவ பல்கலை மாணவர்கள் கைது!

0
24

மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 14 ஆம் திகதி சமனலவெவ பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, குறித்த மாணவர்கள் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழியியல் கற்கை பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்களே இவ்வாறு கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கைதானவர்கள் மொரவக்க, ருக்கஹவில, அளுத்தரம, இமதுவ மற்றும் கித்தலவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here