சமர்வில் தோட்ட ஆலயத்தில் விநாயகர் சிலை உண்டியல் திருடப்பட்டுள்ளது!!

0
101

சமர்வில் தோட்ட ஆலயத்தில் விநாயகர் சிலை. உண்டியல் திருடப்பட்டுள்ளதுஅட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட சமர்வில்தோட்ட மாரியம்மன் ஆலயத்தில் விநாயகர் சிலை உட்பட உண்டியல் என்பன காணாமல் போயுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலயம் புணரமைப்பு பணிகள் இடம்பெற்று வருக்கின்ற நிலையில் தற்காளிக கூடாரத்தில் வைத்திருந்த சிலையே 07.02.2018 இரவு காணாமல் போயுள்ளது.

பூஜைக்காக 28.02.2018 மதியம் ஆலய பூசகர் தற்காளிகமாக அமைக்கப்படிருந்த கூடாரத்திற்கு சென்றபோதே கதவு உடைக்கப்பட்டு விநாயகர் சிலையும் உண்டியலும் திருடிச்சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

ஆலய பரிபாலன சபையினரால் அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான விசாரணையை அட்டன் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here