சமூகத்தின் மாற்றத்தை விரும்பாத சந்தர்ப்பவாத அரசியலை நடத்தும் சில கோமாளிகள் கீழ்தனமான விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள்

0
57

சமூகத்தின் மாற்றத்தை விரும்பாத சந்தர்ப்பவாத அரசியலை நடத்தும் சில கோமாளிகள் கீழ்தனமான விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட இளைஞர் அணி அமைப்பாளர் யோகேஸ்வரன் அர்ஜூன் தெரிவித்தார்.

சத்துணவு திட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சத்துணவு திட்டம் வரவேற்கப்படவேண்டிய ஒன்று.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் ஐந்து வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கிலும், போஷாக்கு குறைபாட்டை நிவர்த்திசெய்யும் நோக்கிலும் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் மத்தியிலும் சிறந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்த சத்துணவு திட்டம் எதிர்காலத்தில் ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்க முன்மாதிரியாக அமையும். அந்தவகையில் இத்திட்டத்தை சிலர் விமர்சனம் செய்வது வேடிக்கையாக உள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொருத்தமட்டில் எந்த காலகட்டங்களில் எவ்வாறான திட்டங்களை முன்வைத்தால் அவை மக்களுக்கு நன்மை பயக்குமோ அவ்வப்போது சிறப்பான திட்டங்களின் மூலம் எம் சமூக்தை முன்னோக்கி கொண்டுசெல்வது யாவரும் அறிந்ததே.

தங்களை அரசியல் ரீதியில் பிரபல்யம் அடைந்துக் கொள்வதற்காகவும், அரசியலில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களை சில கோமளிகள் இவ்வாறு விமர்சித்து வருகின்றார்கள்.

விமர்சனம் செய்யும் நபர்கள் யார் என்று கூட எங்களுக்கு தெரியாது. மலையகத்தில் மாசி மாதம் வந்தால் காமன் கூத்து நிகழ்வில் சில கோமளிகள் இருப்பார்கள். அதேபோல், தேர்தல் காலங்கள் அறிவிக்கும் பொழுது அவ்வப்போது இவ்வாறான சில கோமளிகள் தங்களை பிரபல்யம்படுத்துவதற்காக இவ்வாறு சில கருத்துகளை எழுத தான் செய்வார்கள்.

மலையக மக்களுக்காக முன்னெடுக்கும் திட்டங்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. வெற்றிகரமாக செயற்படும் எங்கள் அரசியல் தலைவரை செயற்படவிடுங்கள் என்றார்.

 

(அந்துவன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here