சமூக உணர்வோடு தீபத் திருநாளை வரவேற்போம்!

0
50

அரசியல் நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் சமூக உணர்வோடு சிந்தித்து செயற்பட்டு தீபாவளிப் பண்டிகையை வரவேற்போம் என இ.தொ.கா. தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தமது செய்தியில்,

கடந்த கலங்களை விட மலையக மக்கள் மிகவும் வித்தியாசமான முறையில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட வேண்டிய நிலையில் உள்ளார்கள். எத்தனையோ தடைகளுக்கு மத்தியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1350 ரூபாவாகப் பெற்றுக் கொடுத்துள்ளோம். அன்றும் இன்றும் என்றும் மலையக மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து அவர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய மாபெரும் சக்தியாக இ.தொ.கா. இருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.

நாம் அரசியல் ரீதியில் பலமான சக்தியாக இருந்து காலத்துக்குக் காலம் உரிமைகளைப் பெற்றுக் கொடுத்து வந்துள்ளோம். எமது ஒற்றுமையின் காரணமாக தேசியக் கட்சிகளுடன் பேரம் பேசி எமது மக்களின் நலன் சார்ந்த விடயங்களையும் அபிவிருத்திப் பணிகளையும் நிறைவேற்றி வந்திருந்தாலும் அண்மைக் காலமாக அரசியல் ரீதியில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், சமூக நலன் கருதி நாம் மிகவும் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். எமது ஒற்றுமை, அடையாளம், உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள சமூக உணர்வுடன் செயற்பட வேண்டிய காலம் வந்துள்ளது. எமது ஒற்றுமையையும், கட்டுக் கோப்பையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அரசியல் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நேரத்தில் எமது இருப்பையும், பலத்தையும் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் மிகவும் பொறுப்புடனும், நிதானத்துடனும் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சிந்தித்து வாக்களித்து சமூகக் கடமையை நிறைவேற்றத் தயாராக வேண்டும். அதற்கான திடங்கற்பத்தைப் பூண்டு, இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை நம்பிக்கையுடன் வரவேற்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here