சம்பள உயர்வு வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் சாத்தியம்!

0
106

சம்பள உயர்வு வழங்காத தொழில் தருனர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

தனியார்துறை ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு சம்பள உயர்வு வழங்காத அனைத்து தொழில் தருனர்களுக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்படும் என அமைச்சர் ஜோன் செனவிரட்ன, நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வினை வழங்காமை குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் தருனர்களின் அழுத்தங்களுக்கு நான் அடி பணியப் போவதில்லை.

2500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படாமை தொடர்பில் உடனடியாக வழக்குத் தொடரப்படாது.

முதலில் இது குறித்து தொழில் தருனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். கட்டம் கட்டமாகவேனும் சம்பள உயர்வினை வழங்கமாறு அறிவுறுத்தல் விடுக்கப்படும்.

இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சந்தர்ப்பத்தில் வழக்குத் தொடரப்படும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க இலங்கை மற்றும் மக்கள் வங்கிகளின் ஊடாக கடன் வழங்கப்படுகின்றது.

இதற்காக அரசாங்கம் 1000 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளதாக ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here