சம்பள உயர்வை வலியுறுத்தி பொகதலாவை ராணி காடு தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம

0
45
தமக்கான சம்பள உயர்வை வலியுறுத்தி பொகவந்தலாவ லொயினோன் ராணிக்காடு தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று(2/2/2024) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

தோட்டத்தில் தொழில் செய்யும் இடமொன்றில் ஒன்று கூடிய தோட்டத்து தொழிலாளர்கள் “தற்போது வழங்கப்படுகின்ற 700 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரையான நாளாந்த கூலியால் வாழ்க்கைச் செலவை ஈடு செய்ய முடியாது . உடனடியாக தமக்கான சம்பள உயர்வை அரசாங்கமும் தோட்ட கம்பனிகளும் வழங்க வேண்டும் “என்று இந்த போராட்டத்தின் போது வலியுறுத்தினர்.

மேலும் “தமது போராட்டத்துக்கு அரசாங்கமும் கம்பனிகளும் செவி சாய்க்காவிட்டால் தொடர் வேலை நிறுத்தப் போராட்டமொன்றுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் “என்று ராணிகாடு தொழிலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here