சருமத்திலுள்ள கருமையைப் போக்கணுமா…கடலை மா மட்டும் போதும்!

0
49

முகத்தை அழகாக்குவதற்காக பணத்தை செலவழித்து பல அழகு சாதன நிலையங்களுக்கு செல்கிறோம். உண்மையில் பணம் செலவழிக்காமலேயே முகத்தை அழகுபடுத்துவதற்கான பொருட்கள் நம் வீட்டிலேயே காணப்படுகின்றன.

அவற்றில் குறிப்பாக, கடலை மா. கடலை மாவானது அனைத்து விதமான சருமப் பிரச்சினைகளுக்கும் மிகவும் உகந்ததாக காணப்படுகிறது.

சரி இனி கடலை மா எவ்வாறு சருமத்தை பாதுகாப்பதில் பங்களிப்பு வெலுத்துகிறது எனப் பார்ப்போம்.

தற்போது வெயில் காலம் என்பதால் வெளியில் சென்று வீட்டுக்கு வந்தால் சருமம் கருமையடைந்து பொலிவிழந்து காணப்படும். அவ்வாறான சந்தர்ப்பங்களில், கடலை மா ஒரு கரண்டி, தேங்காய் பால் ஒரு கரண்டி சேர்த்து கலந்து முகத்தில் பூச வேண்டும். அது உலர்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும்.

கடலை மாவையும் உருளைக்கிழங்கு சாறையும் சேர்த்து முகத்தில் பூசினால், ஒரு பளபளப்பு ஏற்படும்.சிலருக்கு கழுத்து, முழங்கை என்பவை கருப்பாக இருக்கும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் தயிர், கடலை மா, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையான இடங்களில் தடவினால், கருமை விரைவில் மறைந்துவிடும்.

சருமத்தில் எண்ணெய் வழிந்து காணப்பட்டால், கடலை மாவுடன் சிறிதளவு தயிர் சேர்த்து பேஷியல் செய்தால் முகம் தெளிவடையும். இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பேக் போல் செய்தாலும் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here