மாத்தளை மந்தண்டாவளை இந்து தேசிய கல்லூரியில் தரம் 8 இல் கல்வி பயிலும் செளந்தரநாயகம் பவித்திரவர்ஷன் “குடோ” விளையாட்டில் மாகாண,தேசிய ரீதியில் பதகங்கள் பல பெற்ற திறமையான மாணவர்.இவருக்கு இந்தியா,மும்பையில் இடம்பெறும் சர்வதேச குடோ போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பு கிட்டியுள்ளது.இலங்கை சார்பாக 18 பேர் கலந்து கொள்கின்ற போதும் மாத்தளை மாவட்டம் சார்பாகவும் மலையக சமூகம் சார்பாகவும் கலந்து கொள்ளும் ஒரே வீரர் இவரே.
இருந்தும் அங்கு செல்வதற்கு போதிய நிதி வசதி இல்லாமல் சிறமப்பட்டு வந்த நிலையில் ஊடக நிறுவனம் ஒன்று இது தொடர்பாக செய்தியை வெளியிட்டிருந்தது. செய்தி அறிந்த மத்திய மாகாண சபை உறுப்பினர் கெளரவ இரா.ராஜாராம் அவர்கள் அம் மாணவன் வசிக்கும் மாத்தளை நோர்த் இலக்கம்-02 தோட்டத்திற்கு சென்று சர்வதேச போட்டியில் சிறுவன் பங்குப்பற்றுதலை ஊக்கப்படுத்த உதவி தொகையை வழங்கி வெற்றி பெற வாழ்தினார்.
இதன் போது மந்தண்டாவளை இந்து தேசிய கல்லூரியின் அதிபர்,பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் கலந்து கொண்டதோடு மந்தண்டாவளை இந்து தேசிய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் சார்பிலும் ஊக்க தொகை ஒன்றும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாளை மும்பை நோக்கி பயணமாகும் பவித்திரவர்ஷன் க்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்.