சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு தலவாக்கலை ஷைன் ஆரம்ப பிரிவு பாடசாலையின் அதிபர் திருமதி. ரோய் சமுவேல் தலைமையில் 17.05.2018 அன்று காலை தலவாக்கலை நகரில் ‘சமாதானத்துடன் ஒற்றுமையாக வாழ்வோம்’ எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
இதில் சர்வமத தலைவர்கள், பாடசாலை மாணவர்களின் பெற்றௌர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சமாதானம் தொடர்பான விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி. உண்மையான சமாதானம் ஒவ்வொரு மனிதனின் ஆத்மாவிலிருந்து வெளிப்படுகிறது என வசனத்துடன் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)