சர்வதேச மொழியினை விருத்தி செய்ய அக்கரபத்தினையில் சர்வதேச பாடசாலை திறந்து வைப்பு.

0
20

ஒரு நாட்டின் தேவையினை கருத்தில் கொண்டு கல்வியில் மாற்றம் கொண்டு வருவது இன்றியமையாத ஒன்றாகவே உள்ளது. இன்று எமது நாட்டின் அந்நியச் செலவாணியினை பெற்றுக்கொள்வதென்றால் சர்வதேச மொழியான ஆங்கில மொழி முக்கியமான ஒன்றாகவே உள்ளன. இதனை கருத்தில் கொண்டு பல பிரதேசங்களில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்நிலையில் மலையகத்தில் இளைஞர் யுவதிகள் வெளிநாட்டு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கும் சர்வதேச மொழி விருத்தி கட்டாயமான ஒன்றாகவே காணப்பட்டு வருகின்றன.

இந்த குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக அக்கரபத்தனை பசுமலை நகரில் இன்று கெப்ரிகொன் சர்வதேச தனியார் பாடசாலை ஒன்று இன்று (18) மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த பாடசாலையில் தரம் ஒன்று முதல் தரம் 13 ஆங்கில மொழியில் கற்றல் கற்பித்தல் செயப்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த பாடசாலையில் திறந்து வைக்கும் வைபவமும் பாடசாலையின் அதிபர் ஜெய சத்தியவாணி தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர் ராமன் கோபால்,முன்னாள் தலைவர் கதிவேல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உபதலைவர் சச்சிதா நந்தன்,அக்கரபத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,மற்றும் மும்மத தலைவர்கள்,ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் மாணவர்களுக்கு பாடசாலை சின்னம் அணிவித்தல்,மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டுதல்,பாடசாலை மகுட வாசகம் அறிவித்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

 

மலைவாஞ்ஞன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here