தற்போது கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை(0/l exam)யை எழுதும் மாணவர்களுக்கான புதிய உயர்தர வகுப்புகளை எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெறுபேறுகள் வெளியாகும் முன்னர் உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அனுமதிக்காக அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்திற்கு மாகாண ஆளுநர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளின் அனுமதியும் கிடைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி சாதாரண தரம் வரை மட்டுமே வகுப்புகள் உள்ள பாடசாலைகளின் மாணவர்கள் உயர்தரத்திற்கு அருகில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
உயர்தர வகுப்புகள் நடத்தப்பட்டாலும், குறிப்பிட்ட பாடம் கற்பிக்கப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட பாடப் பிரிவு உள்ள பாடசாலைக்கு மாணவர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த கொவிட் (covid)அனர்த்தத்தின் போது பாடசாலைகள் மூடப்பட்டமையினால் விடுபட்ட கல்வி மற்றும் பாடசாலை பரீட்சை அட்டவணையை மீளமைக்கும் வேலைத்திட்டத்தின் பிரகாரம் இது நடைமுறைப்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த(susil premajayantha) குறிப்பிட்டுள்ளார்.