2022 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கையளிக்கும் காலப்பகுதி நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இணைய முறைமையின் ஊடாக மாத்திரமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 28ஆம் திகதி மதியம் 12 மணிக்கு முன்னர் சகல விண்ணப்பங்களையும் சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது