சாதாரண தர பரீட்சையில் 77 வீத சித்தியெய்தியுள்ள – நானுஓயா டெஸ்போட் மாணவர்கள் !

0
207

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அன்மையில் வெளியாகியிருந்தது. இவ்வாறு வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 27 வருட பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக 77 வீதம் சித்தியைப்பெற்றுள்ளதாகவும் கடந்த வருடம் 66 வீதம் சித்தியைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது .

இது தொடர்பில் பாடசாலை அதிபர் எஸ் .சிவபாலசுந்தரம் கருத்து தெரிவிக்கையில் அண்மையில் வெளியாகிய கா.பொத சாதாரண தரப்பரீட்சை முடிவுகளுக்கு அமைய கணிதம் உட்பட எட்டுப்பாடங்களில் மாணவர்கள் 77 வீத சித்தியைப்பெற்றுள்ளனர். தமிழ் ,கணிதம்,சமயம்,ஆங்கிலம் ,வரலாறு போன்ற பாடங்களில் சிறந்த சித்தி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ,
இப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற சகல மாணவர்களுக்கும் , கற்பித்த ஆசிரியர்களுக்கும் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பாடசாலை சமூகம் சார்பாக தெரிவிப்பதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார் .

 

டி.சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here