சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்

0
37

கல்விப் பொதுத் தராதர பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று (06) ஆரம்பமாகிறது

இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு சாதாரண தர பரீட்சைக்கு 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார் .

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here